எதிர்வரும் நாட்களில் கொழும்பு புறநகர் பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்வரும் நாட்களில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றின் தரம் மிதமான மட்டத்தில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி H.D.S. பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றத்துக்கான காரணம், நாட்டில் கொவிட் நிலைமையால் வாகனங்கள் குறைந்த பயன்பாடாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரவுகளின் படி. ஆகஸ்ட் 18 வரை கொழும்பில் காற்றின் தரம் 'மிதமான மட்டத்தில்' இருக்கும், இது 55 முதல் 70 வரையிலான காற்றின் தரக்குறியீட்டைக் குறிப்பதாக பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
காற்றின் தரம் 0 முதல் 50 வரை நன்றாகவும், 50 முதல் 100 மிதமாகவும், 100 க்கு மேல் இருந்தால், அது ஆரோக்கியமற்றதாகவும் கருதப்படுகிறது.
கொழும்பில் காற்றின் தரம் இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.
அதன் பிறகு, கட்டுப்பாடுகள் மற்றும் விதிக்கப்பட்ட முடக்கல்கள் காரணமாக இது நல்ல அல்லது மிதமான அளவில் உள்ளது என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி H.D.S. பிரேமசிறி தெரிவித்துள்ளார்.