இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் - அமெரிக்கா வெளியிட்டுள்ள நம்பிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு பாரிய பின்னடைவை கண்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் சாதகமான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் என மேற்குலக நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன.
ரணில் மீதான அமெரிக்காவின் நம்பிக்கை
இவ்வாறான நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மையை பிரதமர் ரணில் விக்கரமசிங்கவினால் ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியையும் முடிவுக்கு கொண்டு வருவார். இலங்கை மக்கள் விரும்பும் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனை நேற்று சந்தித்த அமெரிக்க தூதுவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ராஜபக்ஷ சகோதர்களின் ஊழல்
கடந்த ஆட்சியின் போது ராஜபக்ஷ சகோதரர்களால் பாரிய ஊழல் செய்யப்பட்டுதுடன், நாட்டினை வங்குரோத்து நிலையை அடைய வைத்துள்ளனர்.
அவர்களின் அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், நாட்டின் பல பகுதிகளை அந்த நாடுகளுக்கு விற்பனையும் செய்யுள்ளனர்.
இந்நிலையில் மேற்குலக நாடுகளின் செல்லப்பிள்ளையான ரணிலின் மூலம் அமெரிக்கா அடுத்த நகர்வுகளைமுன்னெடுக்க தயாராகி வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
