தேசிய பாடசாலைகளின் விடுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப்பரீட்சைகளை அடுத்த ஆண்டு உரிய காலத்தில் நடத்துவதற்கு முடியுமான வகையில் பாடநெறிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும்

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் பெரும்பாலும் பாடசாலை விடுமுறைகளை குறைத்து, பாடசாலை நாட்களை அதிகரித்து, வருடத்திற்குள் பாடங்களை கற்பித்து நிறைவு செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
2022 ஆம் ஆண்டிற்குள் திட்டமிட்டவாறு பாடங்களை பூர்த்தி செய்வதை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வந்த போது, உயர் தரப்பரீட்சைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிள்ளைகளின் பெற்றோர் விடுத்த கோரிக்கை காரணமாக உயர் தரப்பரீட்சைகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நேரிட்டது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பாடசாலைகளின் இரண்டாம் தவணை முடிவடையவுள்ளதுடன் 5 ஆம் திகதி மூன்றாம் தவணையை ஆரம்பித்து தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam