பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான தருணம் இது: ஜூலி சங்(Video)
மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணம் இதுவாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (05.06.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரிடோ நிறுவனம் மலையக மக்கள் கல்வி சுகாதாரம் பொருளாதாரம் அரசியல் ரீதியான செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு பாரிய அர்ப்பணிப்பினை செய்து வருகிறது.
இந்த செயத்திட்டங்களில் ஒரு சிலவற்றிக்கு அமெரிக்க நிருவனங்களினாலும் அமெரிக்க தூதரகத்தினாலுமே நிதியுதவி வழங்கப்படுகின்றன. மேலும், " நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டனர்.
எனவே, மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்துக்கான பாதையை மாற்றுவதற்கான சிறந்த தருணமே இது.
இலங்கை தற்போது மீண்டெழுகின்றது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு உதவுவதற்கான பங்காளியாக நாம் இருப்போம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
