வங்குரோந்து நிலையில் இலங்கை - இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த சந்திரிக்கா
உலகில் எந்த நாடும் இலங்கையை போன்று வங்குரோந்து நிலையில் இருந்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டை மீட்க அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என குமார வெல்கம கூறினார். ஆனால் திருடர்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என நான் அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
தற்போது வெட்கப்பட வேண்டியுள்ளது
இலங்கையின் தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் மிகவும் பெருமையுடன் உலகம் முழுவதும் பயணித்ததாகவும், தற்போது வெட்கப்பட வேண்டியுள்ளதாகவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்ததாகவும், யாரையும் சந்திக்கவில்லை என்றும் சந்திரிக்கா கூறினார். ராஜபக்ச ஆட்சியின் திருட்டுத்தனத்தால் மட்டுமே இலங்கை இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்றும், கட்சியில் தற்போது வெறி பிடித்தவர்களே உள்ளனர் அவர் குறிப்பிட்டுள்ளார்.