மகிந்தவின் கட்சிக்கு அருகில் அலுவலகத்தை திறக்கும் சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைந்துள்ள பத்தரமுல்லையில் தனது கட்சியின் அலுவலகத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளார்.
17ஆண்டு கால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பொதுஜன ஐக்கிய முன்னணியை அவர் மீள்உருவாக்கம் செய்ய தீர்மானித்துள்ளார் என்பது பகிரங்கமான விடயம்.
இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதியுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இணைந்து செயற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அலுவலகம் திறக்கப்படவுள்ளமை முக்கியஅம்சமாகும்.
அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரக்காவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
