மொட்டுக் கட்சிக்குச் சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்: சந்திரிகா
எதிர்வருகின்ற தேர்தல்கள் எதுவாக இருந்தாலும் அதில் மொட்டுக் கட்சிக்குச் சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகிய இருவரும் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதன்போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்த சந்திரிகா
இந்தச் சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திரிகா கடுமையாக விமர்சித்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
