கடற்றொழிலாளர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கும் அமைச்சர் சந்திரசேகரன்: அன்னராசா குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Kajinthan Jul 18, 2026 03:57 PM GMT
Report

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்.மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல் அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து கடற்றொழிலாளர்களின் அடையாளங்களை அழிக்க முற்படுவதாக முன்னாள் கடற்தொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்  இன்று(18) சனிக்கிழமை வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெற்கைச் சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!

இந்தியாவின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!

கடற்றொழிலாளர்களின் அடையாளம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்துக்கு ஒவ்வாத சீனக் கடல் அட்டை பண்ணைகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊக்குவிப்பது எமது கடற்தொழில் மக்களை கருவறுக்கும் செயற்பாடாக பார்க்கிறோம்.

இந்த செயற்பாட்டுக்கு பிரதேச செயலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது கவலையை உண்டு பண்ணுகிறது.

கடற்றொழிலாளர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கும் அமைச்சர் சந்திரசேகரன்: அன்னராசா குற்றச்சாட்டு | Chandresekaran Try Destroy Ident Fishing Community

ஒரு பிரதேசத்தின் அரச காணிகளுக்கு அந்தப் பிரதேசத்தின் உடைய பிரதேச செயலாளர் பொறுப்பாக இருக்கின்ற நிலையில் எமது கடலையும் அரச காணி போல் கையாள நினைக்கிறார்கள். எமது கடல் எமக்குச் சொந்தம் கடலை யாரும் பிரித்துக் கொடுக்க முடியாது.

அவ்வாறாயின் கடலை பகிர்ந்து வழங்குவதற்கான அதிகாரத்தை யாரிடம் பெற்றார்கள் என கேட்க விரும்புகிறோம்.

ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகத்தின் பாரம்பரிய கடற்தொழிலை இல்லாமல் ஒழிப்பதற்கு அமைச்சர் தலைமையில் மீளவும் அட்டை பண்ணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: இறுதிச்சடங்கு தொடர்பில் வெளியான தகவல்..

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: இறுதிச்சடங்கு தொடர்பில் வெளியான தகவல்..

கடற்றொழிலாளர் பிரச்சினை 

ஏனெனில் ஆட்சி அதிகாரம் இல்லாத காலத்தில் கடல் அட்ட பண்ணைக்கு எதிராக எம்மோடு குரல் கொடுத்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் தற்போது அட்டை பண்ணைகளை வாரி வழங்க முற்படுவது ஏன்.

கடற்றொழில் சமூகத்தின் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கிற பல பிரச்சனைகள் தொடர்பில் நாம் தெற்கை சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியுடன் கலந்துரையாடி அவர்களும் எமக்காக குரல் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.

குறிப்பாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற மீன்பிடி திருத்தச் சட்டம் முற்றாக நீக்கப்படுவதோடு இந்தியா இழுவை மாடி கடற்றொழிலாளர்களின் அட்டகாசங்களுக்கு இராஜதந்திர ரீதியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கடற்றொழிலாளர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கும் அமைச்சர் சந்திரசேகரன்: அன்னராசா குற்றச்சாட்டு | Chandresekaran Try Destroy Ident Fishing Community

மேலும் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார ரீதியில் பின்னோக்கி காணப்படுகின்ற நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானிய மண்ணெண்ணெய் விநியோகத்தை நிறுத்தி விலை குறைப்பு செய்யப்பட்ட மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து எமது கலந்துரையாடலை மேற்கொண்டோம்.

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தேர்தல் காலங்களில் சாதகமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஆட்சி அதிகாரங்களுக்கு வந்த பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்தாமை தொடர்பில் கடற்றொழில் சமூகம் போராட்டத்தின் மூலம் அவர்களின் கவனத்தை செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடினோம்.

ஆகவே எமது கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் அடையாளத்தை அழிப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் முனைவாராயின் அதற்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார். 

ராஜபக்சவுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மர்மமாக இறக்கிறார்களா..! மரணங்களில் தொடரும் மர்மம்..

ராஜபக்சவுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மர்மமாக இறக்கிறார்களா..! மரணங்களில் தொடரும் மர்மம்..

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US