மட்டக்களப்பில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த அமைச்சர் சந்திரசேகரன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரடியாக சென்று ஆராய்ந்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள கடற்கரைப்பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் கடற்றொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களுடன் கலந்துரையாடினார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பினை ஏற்று விஜயம் செய்த அமைச்சர் நேற்று(11.3.2026) கடற்றொழிலாளர்களுடான சந்திப்பினையும் மேற்கொண்டார்.
கலந்துரையாடல்
இதன்போது பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஆற்றுவாய் பகுதியில் நீண்டகாலமான கடற்றொழிலாளர் கோரிவரும் மீனவர் துறைமுகம் அமைத்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் கரைவலை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கேட்டறிந்துகொண்ட அமைச்சர் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காணுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த சந்திப்பில்களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வனிதா செல்லப்பெருமாள்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபை உறுப்பினர் சண்.கணேசநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri