முல்லைத்தீவில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடு கையளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடு கையளிப்பு நிகழ்வானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையிலும் இலங்கைக்கான இந்நிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பிரதான பங்களிப்புடன் நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு
சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கையளிப்பு நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் அரவிந்த ஸ்ரீநாத், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.










Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
