குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சந்திமா விஜேகுணவர்தன
எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு குறித்து அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சந்திமா விஜேகுணவர்தன கூறிய கருத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
பேர்ல் கப்பல் தீ குறித்து சர்வதேச இன்டர்போல் விசாரணை வேண்டும் என்று அவர் வலியுறுத்தியமை தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுத் துறையினர் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது தாம் சர்வதேச பொலிஸ் விசாரணையை கோரியமைக்கான காரணத்தை விளக்கியதாக சந்திமா விஜயகுணவர்தன பொலிஸ் விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் தொடர்பான எனது கருத்துக்கு சான்றாக அனைத்து ஆவணங்களையும் குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த கப்பல் தொடர்பில் இன்டர்போல் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும்
இந்தியாவுக்கு தகவல் வழங்கிய போதும், ஏன் இலங்கைக்கு தகவல்
தெரிவிக்கப்படவில்லை என்றும் முன்னதாக சந்திமா கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பிலேயே இன்று அவர் குற்றப்புலனாய்வு துறையினரால்
விசாரிக்கப்பட்டுள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri