அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது! - ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி சபாநாயகரும் மற்றும் முன்னாள் அமைச்சருமான சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது பரீட்சை ஒன்றுக்கு தோற்றி அதில் சித்தி எய்தியதன் மூலம் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது மக்களின் ஆதரவினால் மக்களினால் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் இதயங்களில் காணப்படுவதற்கு அமைய நாம் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்வது சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிருப்தியை நீக்கும் பொறுப்பு அரசாங்கத்தினதாகும் என சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
