நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாட்டின் சில இடங்களில் 100 மி.மீக்கு மேல் கன மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் காலை நேரங்களில் ஒரு சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழையின்போது, காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
