தமிழரின் உணர்வெழுச்சியை அரசாங்கத்தால் அடக்கவே முடியாது: நாடாளுமன்றில் சாணக்கியன் சூளுரை
அரசாங்கமும், பொலிஸாரும், படையினரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழர்களை முடக்கப் பார்க்கின்ற போதும் அவர்களை அடக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் : சிவாஜிலிங்கம் விடுத்துள்ள சவால்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது
அவர் மேலும் தெரிவிக்கையில், போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கியதற்காக ஜனநாயக போராளிகளின் கட்சியின் உப தலைவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரசாங்கமும், பொலிஸாரும், படையினரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக எமது இனத்தை முடக்கப் பார்க்கின்றார்கள்.
எமது இனத்துக்காக - இனத்தின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லங்களைத் தரைமட்டமாக்க முயலும் அரச தரப்பினரும், இனவாதிகளும் எம்மவர்களின் கல்லறைகளைப் பார்த்து இன்றளவிலும் பயப்படுவது ஏன்?
மாவீரர்களின் சாபம்
தமிழர்களின் உணர்வெழுச்சியை அவர்களால் அடக்க முடியாது. மாவீரர்களின் சாபத்தைக் கோட்டாபய அனுபவித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் அனுபவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இந்த கார்த்திகை மாதம் எம்மவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாதமாகும். அஞ்சலி செலுத்துவதற்குக் கூட இந்த நாட்டில் எமது இனத்துக்கு உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam