விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய சாணக்கியன்
தென்னிந்திய நடிகர் மற்றும் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் (13.01.2024) சாணக்கியன் நேரில் சென்றுள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28ஆம் திகதி (28.12.2023) காலமானார்.
உலகம் முழுவதும் அஞ்சலி
தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவரது இழப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


