மக்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள அழைப்பு
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு -மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஆதரவு போராட்டம்
கைதிகளுக்கான இந்த ஆதரவு போராட்டம் மட்டக்களப்பில் நாளை(17) நடைபெறவுள்ளது.
'பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிப்போம்' என்ற தொனிப்பொருளில் காலை 7.30 மணிமுதல் காந்தி பூங்கா முன்றலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சாணக்கியன் விடுத்துள்ள அழைப்பு
"இந்தக் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க - அதிலும் தமிழ் பேசும்
மக்கள் மீது கூடுதலாகத் திணிக்கப்படும் இந்த சட்டத்துக்கு எதிராக இந்த
போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு உங்கள் ஆதரவை வழங்குங்கள்" என்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 9 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
