சாணக்கியனால் பீதியடைந்த தேரர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு - செய்திகளின் தொகுப்பு
மட்டக்களப்பில் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக குறித்த பகுதியில் உள்ள பௌத்த மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தொடர்ந்தும் சிங்கள மக்களை எச்சரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரையிலுள்ள சிங்கள விவசாயிகளை குறித்த பகுதியில் இருந்து விரட்டும் நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்திருந்தார்.
அப்பகுதியில் நாம் அமைத்திருந்த விகாரையை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையையும் காணாமல் ஆக்கியிருந்தார் என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
