அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க பல வழிகளில் முயற்சி – சம்பிக்க
அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அரசாங்கம் 21 தடவைகள் முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தேர்தல் நடாத்துவதற்கு பணத்தை வழங்குவதனை நிறுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வருமானம்
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதி வழங்குவதனை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்கள் அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டியது அவசியமானது எனவும், நிதி அமைச்சின் செயலாளர் இதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மதிக்கும் ஓர் அதிகாரி என்ற ரீதியில் அவர் தனது பணிகளை சரியான முறையில் செய்வார் என பாணந்துறை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வருமானத்தில் ஒருநாள் வருமானத்தைக் கொண்டு தேர்தலை நடாத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
