இலங்கையில் பொருளாதார மீட்சிக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்: கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் தகவல்
இலங்கை எதிர்பார்த்ததை விட வலுவான பொருளாதார மீட்சியை அனுபவித்து வருகிறது எனினும், நெருக்கடிக்குப் பிந்திய மீட்சியை நீண்டகால, கட்டமைப்பு ரீதியாக இயக்கப்படும் வளர்ச்சியாக மாற்றுவதே தற்போதுள்ள சவால் என்று கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் (IPS) 'இலங்கை: பொருளாதாரத்தின் நிலை 2025' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.9 சதவீதத்தை எட்டியது.
வளர்ச்சியின் நிலைத்தன்மை
இந்த சுழற்சி மீட்சி நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், வளர்ச்சியின் நிலைத்தன்மை உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆதாயங்களை அதிகளவில் சார்ந்திருப்பதாக கொள்கை ஆய்வுகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம் என்பதையும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த சீர்திருத்தங்கள், சமூகத்தில் ஏற்படு;த்தக்கூடிய பொருளாதார அழுத்தங்கள் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை திசை திருப்பக்கூடும் குறித்த சிந்தனைக்குழு எச்சரித்துள்ளது.
தெளிவான பாதை
டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப உட்செலுத்துதல், வேகமான மற்றும் செலவு குறைந்த உற்பத்தித்திறன் ஆதாயங்களுக்கு தெளிவான பாதையை ஏற்படுத்தும்.
தேசிய கணினி கல்வியறிவு 39 சதவீதமாக குறைவாகவே உள்ளது, பெருந்தோட்டத்துறைகள் 17.9 சதவீதமாக பின்தங்கியுள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஐபிஎஸ் என்ற இந்த சிந்தனைக்குழு, நெருக்கடிக்குப் பிந்திய மீட்சிக்கான ஒரு கட்டாயக் கதையை உருவாக்க இலங்கைக்கு சீர்திருத்தங்கள் உதவும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
