புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்பு
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்று பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் நியமிக்கப்பட்டிருந்நதனர்.
இந்தநிலையில், தவிசாளராக முன்னாள் போராளி "வேலாயுதம் கரிகாலனும் பிரதி தவிசாளராக ஓய்வு நிலை பிரதி கல்விப்பணிப்பாளர் "சுந்தரம் பரந்தாமனும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கடமைகளை பொறுப்பேற்பு
இதனையடுத்து, குறித்த இருவரும் இன்று (03.06.2025) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் தங்களது கடமைகளை பொறுப்பேற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
