தனியாக வீதிகளில் செல்லும் பெண்களுக்கு பொலிசார் எச்சரிக்கை
இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் தங்க சங்கிலிகள் கொள்ளையடித்த 4 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம, கல்னேவ, பெல்மடுல்ல மற்றும் ராகம பிரதேசத்தில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ராகம பிரதேசத்தில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி பறித்து செல்லப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனைய பிரதேசங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் தங்க சங்கிலி பறித்து செல்லப்பட்டுள்ளது.
போதை பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களினால் இந்த கொள்ளை சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறான தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 17 பேர் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க நகை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் தனியான வீதிகளில் செல்லும் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
