மூன்று மாதங்களுக்கு மின்சார துண்டிப்பை தவிர்க்க செய்ய வேண்டியவை என்ன?
மின்சாரத்தை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தாவிட்டால் எதிர்வரும் மூன்று மாதங்களில் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று மாதங்களில் மின்வெட்டை உத்தியோகபூர்வமாக அறிவிக்க இலங்கை மின்சார சபை அனுமதி கோரியுள்ளதாகவும், மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்தாவிட்டால் மின்வெட்டு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, மறு அறிவித்தல் வரை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின் பாவனையை நுகர்வோர் குறைந்தபட்சமாக மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார அடுப்புகள், ஆடை சலவை செய்யும் இயந்திரங்கள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாள் ஒன்றிற்கு 50 மெகாவாட் செலவில் சுமார் 500,000 தெரு விளக்குகள் இரவில் எரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 80 சதவீத தெருவிளக்குகளை அணைக்க வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள குளிரூட்டிகளை ஜெனரேட்டர்கள் மூலம் தினமும் நான்கு மணி நேரம் இயக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இல்லையேல் மின்சார சபை கோரியபடி மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam