தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கத்தின் முடிவு
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில்,''ஒரு நபரின் கலாசார அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விதிமுறைகளை விதிக்க நாங்கள் தயாராக இல்லை.
விதிமுறை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட உடைகள் பயன்படுத்தப்படுவதாக பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்தால் மட்டுமே அத்தகைய முடிவு பரிசீலிக்கப்படும்.
இதுவரை, பொலிஸ் உட்பட பாதுகாப்பு நிறுவனங்கள், எந்தவொரு உடையும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை.
மேலும், அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை, எனவே இந்த விடயம் பரிசீலனையில் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri

கும்பமேளாவுக்கு கணவரால் வர முடியாததால்.., Video call செய்து தண்ணீரில் போனை முக்கி எடுத்த மனைவி News Lankasri

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள் Manithan
