ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பில் விரைவில் தீர்வு வேண்டும் : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
மலையக பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்தும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாமை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2015 ஆண்டு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்தும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்ட விடயங்களாக,
ஆசிரியர் உதவியாளராக நியமனம்
2015 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளராக நியமனம் வழங்கிய போது மாதாந்த கொடுப்பனவாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு பின் பல போராட்டங்களுக்கு மத்தியில் கொடுப்பனவானது 10000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு கட்டம் கட்டமாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் வகையில் நியமனம் வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்ற அநேகமானோர் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டாலும் சப்ரகமுவ, மத்திய, உவா மற்றும் தென் மாகாணங்களில் பயிற்சியை நிறைவு செய்து இறுதி ஆண்டு பரீட்சை பெறுபேறுகள் 2022/10/20 திகதி வெளியாகியும் கூட இதுவரை நியமனத்தினை வழங்காமல் கல்வி அமைச்சும் மற்றும் மாகாண கல்வி அமைச்சும் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.
நியாயமான தீர்வு
இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பல கடிதங்களும் அனுப்பியும், போராட்டங்களை நடத்தியும் இவர்களுக்கான நியாயமான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
நாட்டின் பொருளாதார நெருக்கடியில் பாரிய பிரச்சினைகளுக்கு இவ் ஆசிரியர் உதவியாளர்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
மலையக மக்களின் வாக்கை பெற்று தற்போது கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கும் அரவிந்தகுமார் இவ்விடயத்தில் தலையீடு செய்து மிக விரைவில் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மிக விரைவில் இதற்கான தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
