மத்திய மாகாணத்தில் தொடரும் மோசடி குற்றச்சாட்டு - விசாரணைக்கு புதிய குழு நியமனம்
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் ஒரு தணிக்கை குழுவை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி மோசடிகள்
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலக அலுவலகங்களில் 2023 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் தணிக்கைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் “அஸ்வெசும” கொடுப்பனவுகளில் இடம்பெறும் மோசடி தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறித்து ஆராயப்படும்.

மேலும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரணக் கொடுப்பனவுகள் முறையாக விநியோகிக்கப்பட்டதா என்பதையும், கோவிட்-19 பெருந்தொற்றின் போது சமுர்த்தி திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5,000 உதவித்தொகை குறித்தும் இந்தத் தணிக்கை ஆராயவுள்ளது.
அத்துடன், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அரசாங்க மானியங்கள் உரியவர்களுக்கு முறையாக ாஎன்பதையும் இந்தக் குழு விசாரணை செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.