கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசு: போராட்டத்திற்கு தயாராகும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வரும் 26 ஆம் திகதி கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை தொழிலுக்கு சென்ற இரண்டு படங்களையும் அதிலிருந்த 21 கடற்றொழிலாளர்களையும் எல்லை மீன் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து ராமேஸ்வரம் விசைப்படகு சங்க பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நேற்று (18) அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம்
இதன்போது, கூட்டத்தில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 கடற்றொழிலாளர்களையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும்.
மேலும், இலங்கை
கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வரும்
26 ஆம் திகதி ராமேஸ்வரம் கடற்றொழில் அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்து கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதனடிபடையில், கடற்றொழில் தடைக்காலம் அறிவிக்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை படகுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது நடவடிக்கை நடைபெறாமல் இரு நாட்டு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |