18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் வழங்கும் விசேட சலுகை
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கலாசார நிதியத்திற்கு சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழு இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
நுழைவுச்சீட்டுக்கள் தேவையில்லை..
உள்ளூர் குழந்தைகளிடையே கலாசார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும், தேசிய பாரம்பரியம் மற்றும் இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

அதன்படி, இந்த வாய்ப்பின் காரணமாக, சிகிரியா, யாபஹுவ, தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாசார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை, நுழைவுச் சீட்டுக்கள் இல்லாமல் குழந்தைகள் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கு இணையாக, வெளிநாட்டு குழந்தைகளுக்கு வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் சம்பந்தப்பட்ட இடங்களுக்குள் நுழைவதற்கான அனுமதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri