தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பி முத்து அல்ல: மத்திய குழு உறுப்பினர் சூரிய பிரதீபா
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தெரிவு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இடம் பெற்று வரும் நிலையில் தன்னை தலைவராக அருண் தம்பி முத்து கூறுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரும் மகளிர் பேரவைச் செயலாளருமான சூரியமூர்த்தி சூரிய பிரதீபா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ சில ஊடகங்களில் அவதானித்த அதன் அடிப்படையில் அருண் தம்பி முத்து தன்னை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எனக் கூறி கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
அவர் அவ்வாறு கருத்துக்களை முன் வைப்பது ஏற்க முடியாது சிலர் தம்மை தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் என கூறிக்கொண்டு கூட்டத்தை நடத்தி இருந்தார்கள்.
இந்தக் கூட்டம் செல்லுபடி அற்றது என அறிவிக்குமாறு நீதிமன்றத்தில் மத்திய குழு உறுப்பினர்கள் வழக்கு தாக்கல் செய்த நிலையில் வழக்கு இடம்பெற்று வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இடம்பெற்று வரும் நிலையில் அருண் தம்பி முத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக தன்னை கூறிக்கொள்ள முடியாது.
கருத்து தெரிவிப்பது ஜனநாயக உரிமை அருண் தம்பி முத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என கூறாமல் தனது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
ஆகவே ஊடகங்கள் மற்றும் தூதுவராலயங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என அருண் தம்பி முத்து கருத்து வெளியிடுவதியோ கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்வதையோ ஏற்க வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.