மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பான அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
மத்திய வங்கி பணியாளர்களுக்கு முன்மொழியப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்ட, 70 சதவீத சம்பள உயர்வு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் முன்னைய சதவீத நிலைக்கு சம்பள உயர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 2021ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்த 27.49 சதவீதத்துக்கு இந்த சம்பள உயர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்பான ஆழமான பரிசீலனையைத் தொடர்ந்து இந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) தமது அறிக்கையை கையளித்துள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,