மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரம்! ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் குழு ஒன்றை நியமிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,சம்பள திருத்தம் தொடர்பான COPF அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொது நிதிக்கான குழுவிற்கு அறிவித்துள்ளார்.
கால அவகாசம்
விரைவான தீர்வு ஒன்றை உறுதி செய்வதற்காக குழுவின் அறிக்கைக்கு 4 வார கால அவகாசம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் குழு ஒன்றை நியமிப்பார்.
அதுவரை சம்பள அதிகரிப்பு அடுத்த மாதம் முதல் ஒத்திவைக்கப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri