மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை: செவிசாய்க்காத கோட்டாபய அரசாங்கம்
இலங்கை முகங்கொடுக்கவிருக்கும் 'பொருளாதாரப் பேரழிவு' குறித்துத் தான் முன்கூட்டியே எச்சரித்ததாகவும், இருப்பினும் அப்போதைய மத்திய வங்கியின் மேலிடமோ அல்லது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமோ அதற்குச் செவிசாய்க்கவில்லை என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் 'நவீன நாணயக்கொள்கையின்' விளைவாக நாடு முகங்கொடுக்கவிருக்கும் மிகமோசமான பொருளாதார நெருக்கடியை மூன்று வருடங்களுக்கு முன்னரே தான் கணித்ததாகவும், மத்திய வங்கியின் அப்போதைய நடவடிக்கைகளின் ஆபத்தான தன்மை குறித்துத் தான் எச்சரித்ததுடன் அதன் விளைவாக 2021 செப்டெம்பரில் முன்கூட்டியே ஓய்வுபெறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.எஃப்.பி செய்திச்சேவைக்கு வழங்கியிருக்கும் விரிவான நேர்காணலிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அக்காலப்பகுதியில் நாணயக்கொள்கை குழுவின் தலைவர் என்ற ரீதியிலும், சிரேஷ்ட பிரதி ஆளுநர் என்ற வகையிலும் நான் எப்போதும் கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
