பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ள முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாட்டின் கீழ் தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும்,
மத்திய வங்கிக்கு ஏற்கனவே கிடைக்கின்ற இப்பாய்ச்சலினை பிணையமாக்குகின்ற சாத்தியப்பாட்டினை கண்டறிவதற்காக தற்போது முன்மொழிவுக்கான கோரிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாடானது ஏதேனும் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீது தாக்கம் எதனையும் கொண்டிராது.
அத்துடன் கடந்தகாலங்களைப் போன்று பணவனுப்பல்களை இலங்கையில் உள்ள வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் தடையின்றி தொடர்ந்தும் வைத்திருக்கலாம் அல்லது இலங்கை ரூபாவாக மாற்றலாம்.
எனவே, பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மேலும் உண்மையற்ற தகவல்களால் தவறாக வழிநடத்தப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
