ஆளுநர் பதவி விலகியுள்ள நிலையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் தாம் கையளித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2022 ஏப்ரல் 05ஆம் திகதியன்று அதாவது இன்றைய தினம் மு.ப 07.30 மணிக்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க இன்று நடைபெறவிருந்த ஊடக மாநாடும் பிற்போடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடக அறிக்கை மற்றும் ஊடக மாநாட்டுக்கான அறிவிப்பு திகதி விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்கவை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 16 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
