கப்ராலுக்கு எதிரான முறைப்பாடு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கப்ராலுக்கு எதிராக தனிப்பட்ட முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கப்ராலின் சட்டத்தரணி முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை பரிசீலித்த நீதிமன்றம், தனிப்பட்ட முறைப்பாட்டினை நிராகரித்துள்ளது.
தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான ஆதாரங்களை வழங்க வாதி தவறிவிட்டதாகவும், எனவே முறைப்பாட்டை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி தென் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.