வங்கிகளுக்கு மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு
அனுமதி பெற்ற வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களை (UINs) சம்பந்தப்பட்ட வங்கி அமைப்புகளில் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தகவல் முகாமைத்துவ செயல்முறையின் நிலைத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்காக இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி
இந்த நிலையில், மத்திய வங்கி அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும் அனுமதி பெற்ற சிறப்பு வங்கிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளது.
2022 ஒக்டோபர் 01முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து புதிய வைப்பாளர்களும் இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்குவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே உள்ள வைப்புதாரர்கள் 31 டிசம்பர் 2022 க்குள் இந்த அமைப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.