அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்
அரசிற்கு சொந்தமான நிறுவனங்களில் சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசிற்கு சொந்தமான நிறுவன சீர்திருத்தத்திட்டம்
அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் நிதி நிலையை வலுப்படுத்தவும், அவற்றின் நிர்வாகத்தை மேம்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய பொது நிதி அபாயங்களைக் குறைக்கவும், அவற்றில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ந்து நடைபெற்று வரும் அரசிற்கு சொந்தமான நிறுவன சீர்திருத்தத் திட்டம், இந்த நிறுவனங்களால் அரசாங்கத்தின் மீதான நிதி அழுத்தத்தை மேலும் குறைக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam