இலங்கையின் எதிர்கால அரசாங்கங்களுக்கு மத்திய வங்கி ஆளுநரின் ஆலோசனை
இலங்கை தனது கடன் கடமைகளை நிறைவேற்றாத காரணத்தினால், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடான இயல்புநிலையில் இருந்து வெளியேறி, கடன் தரவரிசையில் முன்னேற்றம் காண்பதே முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் விவகாரங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த இயல்புநிலைகளில் இருந்து வெளியேற மறுசீரமைப்பு செயல்முறையை முடிப்பதே ஆரம்ப முன்னுரிமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்த முயற்சியின் வெற்றியே இலங்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆளுநர் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் ஆளுநருடன் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டார்.
கடனளிப்பவர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய இரு தரப்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் நுழைந்ததன் பின்னர் சவாலான சூழ்நிலையிலிருந்து இலங்கை வெளி வந்துக்கொண்டிருப்பதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்
எனவே எந்தவொரு அரசாங்கமும் இந்தத் திட்டத்தின் பாதையில் இருந்து பின்வாங்காமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
