மத்திய வங்கி ஆளுநர் வெளிப்படுத்தவுள்ள முக்கிய இரகசியங்கள்! விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு
ஏற்றுமதி மூலம் கிடைக்கும் டொலர்களை இலங்கைக்கு கொண்டு வராமல் தாம் ஈட்டிய வருமானத்துடன் ரூபாவாக மாற்றும் வர்த்தகர்கள் குறித்த தகவல்களை நாட்டுக்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஏற்றுமதியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் விதிமுறை

இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளின் படி, ஏற்றுமதியாளர்கள் 180 நாட்களுக்குள் ஈட்டிய டொலர் வருமானத்தை நாட்டுக்கு கொண்டு வந்து பணத்தை ரூபாவாக மாற்ற வேண்டும்.
இலங்கையின் முதல் நூறு ஏற்றுமதியாளர்களில் 27 ஏற்றுமதியாளர்கள் மாத்திரமே மேற்படி விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam