ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து செல்லிடப்பேசி மீட்பு
தற்பொழுது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து(Ranjan Ramanayakke) செல்லிடப்பேசியொன்று மீட்கப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ரஞ்சன் வெலிச்சடை சிறைச்சாலை மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.
முழங்காலில் ஏற்பட்ட உபாதைக்காக ரஞ்சன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
இவ்வாறு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஞ்சனிடம் சோதனையிட்ட போது செல்லிடப்பேசி மற்றும் ஹான்ட்ஸ்ப்ரீ என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ரஞ்சனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.





பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
