முல்லைத்தீவில் வீட்டு காணியிலிருந்து செல் மீட்பு
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீட்டு காணியிலிருந்து வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை உரிமையாளரினால் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் மோட்டார் செல் இருந்துள்ளதை கண்டுள்ளார்.

குண்டு செயலிழப்பு
இதையடுத்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு வீட்டுக்காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குண்டை நேற்றையதினம் (14.10.2023) செயலிழக்க செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை முல்லைத்தீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam