பெண்களுடன் இரவு வேளையில் ஒன்றுகூடும் அரசாங்கத்தின் பிரபலங்களால் பரபரப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாக நிலையிலும் அனுராதபுரத்தில் அதி விசேட இரவு போஜனம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அதிவிசேட இரவு போஜனம், கொரோனா நோய் தொற்று பரவிய பின்னர் நாட்டில் இடம்பெறும் மிகப்பெரிய விருந்து என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்காக தற்போது வரையிலும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்தினால் அநுராதபுரத்தை சூழவுள்ள அனைத்து ஹோட்டல்கள் விடுதிகள் மற்றும் உணவகங்கள் முழுமையாக நிறைந்து காணப்படுவதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய சாதாரண நபர் ஒருவருக்கேனும் ஹோட்டல் அறை ஒன்றை ஒதுக்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இரவு போஜனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள பகுதிகள் உட்பட ஹோட்டல்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.
அமைச்சர்கள், உறுப்பினர்கள், அவர்களின் மனைவிகள், அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமின்றி ஊடகவியலாளர்களும் இந்த நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, அரசாங்கத்திற்கு எதிராக கூட்டம் நடத்துவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுகாதார பணிப்பாளரினால் ஒன்றுக்கூடுவதனை தவிர்க்கும் விசேட சுற்றரிக்கை ஒன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
