ஒரு மணித்தியாலத்துக்கு மாத்திரமே, டீசல் கையிருப்பு! முழுமையாக இருளில் மூழ்குமா இலங்கை?
இலங்கை மின்சார சபையின் டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு, இன்று மாலை 5மணி வரைக்குமே இருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் முழு நாடும் இருளில் மூழ்கும் என்று மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தமை தொடர்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
இந்தநிலையில் நாளைய தினத்தில் மின்சார உற்பத்திக்காக 2000 மெற்றின்தொன் டீசல் மற்றும் உலை எண்ணெய் என்பன தேவைப்படும் என்று ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தாம் இந்த விடயங்களை கூறியபோது, அமைச்சர் கம்மன்பில, அதனை நிராகரித்து வந்தார்.
எனினும் தற்போது அவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என்றும் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிலைமையை சமாளித்து இன்று மாலையில் மின்சாரம் தடைப்படாமல் விநியோகிக்கப்படும் என்று மின்சாரசபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்றூ நவமணி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இந்திய எரிபொருள் நிறுவனம்!
மின்சாரத்துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு - சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri