போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள்: புடின் தொடர்பில் பிரித்தானியாவின் நிபந்தனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த முன்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போர் நிறுத்தம் தொடர்பில் தான் தீவிரமாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவும் உக்ரைனும் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து, அனைவரின் கவனமும் புடின் மீது திரும்பியுள்ளதாக லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைபேசி அழைப்பு
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பில் புடினின் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, புடின் உடனான தொலைபேசி அழைப்பில், நிலம், மின் உற்பத்தி மற்றும் சில சொத்துகளைப் பிரிப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்வது குறித்து சாதகமான நிலைப்பாட்டில் உள்ளனர்.
எனினும், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் ரஷ்யா மற்றும் புடின் தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |