சலே குறித்து வெளியான சிசிரிவி காட்சிகள்! அதிகார ஆசையில் இன்னும் வாழும் மகிந்த
சுரேஷ் சலேவை சித்திரவதை செய்வது போன்ற சிசிரிவி காணொளிகளின் புகைப்படப்பிரதிகள் இன்றையகினம்(13.6.2026) சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.
சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையிலே, சுரேஷ் சலே வைத்தியசாலையிலும் தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியான சிசிரிவி காணொளிகளின் புகைப்படப்பிரதிகளின் கீழ் சில கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்தப் பதிவில், இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக உயிரைப்பணயம் வைத்து போராடிய இராணுவ வீரரை எப்படிக் கொடுமைப்படுத்துகின்றார்கள் எனப் பாருங்கள்.
இராணுவ வீரர்களைக் கொடுமைப்படுத்தி தாக்குவதற்கு தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தினால் தான் முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
இலங்கையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஈஸ்டர் தாக்குதல்: சுரேஷ் சலேயைக் காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்