பொலிஸ் சிறை கூடங்களில் சீ.சீ.ரீ.வி கமரா!
இலங்கையில் பொலிஸ் சிறை கூடுகளில் சிசிடிவி கமரா அல்லது கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பின்னர் சந்தேக நபர்கள் மீதான தாக்குதல்கள் அல்லது வேறு முறைகேடுகள் இடம் பெறுவது நிறுத்தப்படலாம் என குறித்த பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் சுக நலன்களை விசாரிப்பதற்காக வரும் அவர்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் சட்டவிரோதமான முறையில் பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதமான பொருட்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களினால் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் கண்காணிப்பு கமராக்களை சிறைக்கூடங்களில் பொருத்துவதன் மூலம் கைதிகளின் நடத்தை, பொலிஸார் சட்டவிரோதமான முறையில் அவர்களை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri