புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை
வங்கி அமைப்பு உட்பட முறையான வழிகளில் தங்கள் வருமானத்தை அனுப்புவதற்கு உதவுமாறு இலங்கை மத்திய வங்கி இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவரை இலங்கைப் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மத்திய வங்கி, அவர்களின் தொடர்ச்சியான உதவிகளை கோரியுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தற்போதைய அந்நிய செலாவணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவது முக்கியமான தருணம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஹவாலா மற்றும் உண்டியல் போன்ற முறைசாரா வழிகள் ஊடாக வங்கி வலையமைப்பிற்கு வெளியே செயற்படுவதால் இவ்வாறான முறைமைகளின் ஊடாக அனுப்பப்படும் அந்நியச் செலாவணியை அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த முடியாது என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
