அமெரிக்க டொலருக்கு எதிராக வேகமாக உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பும் அதிகரித்துள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 339.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 405.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 382.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ரூபாவின் மதிப்பு உயர்வு
நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது.
தரகர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாவின் மதிப்பு உயர்வடைகிறது.
அருகில் மற்றும் நடுத்தர காலத்தில் ரூபா மதிப்பு மேலும் உயரும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களில் ஏனைய அனைத்து முக்கிய நாணயங்களுக்கும் எதிராக இலங்கை ரூபாவும் சீராக உயர்ந்துள்ளது.


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
