சீனாவின் கைகளில் இலங்கையின் எதிர்காலம்!

Sri Lanka IMF Sri Lanka China
By Amal Jun 17, 2022 05:53 AM GMT
Report

சீனாவின் கைகளில் உள்ள முக்கிய பொறுப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளின்போது, சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன், சிக்கலாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 15% சீனாவிடம் இருந்தே பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, சீனா, இலங்கைக்கான கடனில் மீளமைப்பை மேற்கொள்வதற்கு இன்னும் இணங்கவில்லை.

எனவே சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நிதியுதவியை வழங்குமானால், அதனைக் கொண்டு இலங்கை, சீனாவின் கடனை திருப்பிச் செலுத்தும் செயற்பாடே இடம்பெறும்.

இலங்கைக்கு இயலாத நிலை ஏற்படும்

மாறாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைக்கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளவும், அதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை திருப்பிச்செலுத்துவதற்கும் இலங்கைக்கு இயலாத நிலை ஏற்படும். இதனையே மத்திய வங்கியின் ஆளுநர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் கைகளில் இலங்கையின் எதிர்காலம்! | Cb Governor Says Sri Lanka Should Have Gone To Imf

பொதுவாக, நாடுகளுக்கான கடன் வழங்குநர்கள், தங்கள் கடன்களை மீளமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்காத வரையில், நாடுகளுக்கு பிணை எடுப்பதில்லை என்ற கொள்கையை சர்வதேச நாணய நிதியம் கொண்டுள்ளது.

இதனடிப்படையிலேயே இலங்கைக்கான நிதியுதவியையும் சர்வதேச நாணய நிதியம் பரிசீலிக்கும் என்பதே மத்திய வங்கியின் ஆளுநரின் கருத்தாக அமைந்துள்ளது.

ஹெயார் கட் அவசியம்

எனவே சீனாவிடம் இருந்து பெற்ற கடன் தொடர்பில் அந்த நாட்டுடன் மீளமைப்பு ஒன்றுக்கு செல்வதே(ஹெயார் கட்) தற்போதுள்ள சிக்கல் நிலையாகும்.

ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை நடத்தும் பேச்சுவார்த்தைக்கு தமது ஆதரவு உண்டு என்று சீனா கூறியிருந்தாலும், இன்னும் கடன் மீளமைப்பு தொடர்பில் கருத்துக்களை வழங்கவில்லை.

சீனாவின் கைகளில் இலங்கையின் எதிர்காலம்! | Cb Governor Says Sri Lanka Should Have Gone To Imf

இந்தநிலையில் இலங்கையின் ஒரு நல்ல நண்பராக சீனா, மற்ற கடன் வழங்குநர்களால் வழங்கப்படும் அதேபோன்ற நிவாரணத்தை வழங்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

வரலாற்றில் முதல் தடவையாக கடந்த மாதம், இலங்கை வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச சமூகத்தின் ஆதரவில் இந்த ஆண்டு $5 பில்லியன் தேவை என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்காக கொழும்புக்கு வரவுள்ளது.

சீனாவின் கைகளில் இலங்கையின் எதிர்காலம்! | Cb Governor Says Sri Lanka Should Have Gone To Imf

இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ராலுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட நந்தலால் வீரசிங்க, இம்மாத இறுதியில் இருந்து முழு ஆறு வருட காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது.

எனினும் தாம் தமது பதவியை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாக வீரசிங்க தெரிவித்துள்ளார்

நான் தொடர்ந்தும் இருக்க விரும்புகிறேன்

“நான் பொறுப்பேற்றபோது இரண்டு மாதங்கள் மட்டுமே சேவை செய்துவிட்டு திரும்பிச் செல்வேன் என்ற எதிர்பார்ப்புடன் வரவில்லை“

“அப்படி இருந்திருந்தால், தாம் பதவியை ஏற்றிருக்கமாட்டேன்” அத்துடன் இலங்கையில் உள்ள பிரச்சினை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படக்கூடிய விஷயமல்ல என்றும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US