கிளிநொச்சியில் அதிகரித்துள்ள கால்நடை திருட்டு - பாதிக்கப்பட்ட நபரின் கோரிக்கை
கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் கால்நடைகளின் திருட்டு அதிகரித்து காணப்படுவதாக கால்நடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,
தர்மபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 10-க்கு அதிகமான பசு மாடுகள் இரவு நேரங்களிலும் பகல் வேளையில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலையில், காணாமல் போயுள்ளன.
வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வந்த பசு மாடு ஒன்று கன்று ஈன்று மூன்று மாதம் ஆன நிலையில் மேய்ச்சலுக்காக கட்டி விடப்பட்டிருந்த நிலையில், மாலை சென்று பார்த்த பொழுது கால்நடையை காணவில்லை.

இதன் காரணமாக கால்நடை உரிமையாளர் குறித்த விடயம் தொடர்பாக தர்மபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றிணையும் பதிவு செய்துள்ளார்.
கவலை வெளியிட்ட உரிமையாளர்
உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,
தற்பொழுது களவாடப்பட்ட கால்நடையை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்ததாகவும் நாள் ஒன்றுக்கு மூன்று லீற்றர் பாலினை அப்பசுவிலிருந்து பெற்று பாலினை விற்பனை செய்வதன் மூலமாக தமது வாழ்வாதாரத்தை ஓரளவு மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது மாடும் களவுபாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது மூன்று மாதம் ஆன கால்நடையின் கன்று தற்பொழுது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனை பார்க்கவே சகிக்க முடியாத நிலையில் உள்ளது, தற்பொழுது அந்த கால்நடைக்காக கடையில் பால் பக்கேட்டினை கொள்வனவு செய்து அதனை அந்த கன்றுக்கு வழங்கிறோம்.
சம்பவத்துடன் தொடர்புப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
