பொசனை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சிகிச்சை
பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 125இற்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று (21.06.2024) கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேசனின் பங்களிப்புடன் 51 இராணுவ படைப்பிரிவின் உதவியுடன் குறித்த கண் நோயாளர்களுக்கான சிகிச்சை வைத்திய கலாநிதி மலரவனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி தலைமையில் பொசன் ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
யாழ். போதனா வைத்தியசாலை
அத்துடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட இராணுவ
கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், மற்றும் யாழ். போதனா
வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |